இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

வியாழன், ஜூலை 19, 2012

சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் Android Phone உபயோகிப்போருக்கு

சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகம் Android Phone உபயோகிப்போருக்கு 

சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் ரஹ்மத் பதிப்பக மின்னூடகச் சேவை 

எமது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகளில் தஃப்ஸீர் இப்னு கஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) முதலாம் பாகம் ஏற்கனவே Android மற்றும் iPhone சேவைகளில் வெளியிட்டுள்ளோம். மேலும் எமது அறக்கட்டளையின் முதல் வெளியீடான சஹீஹூல் புகாரீ தமிழாக்கம் முதல் பாகத்தை அனைவரும் பயனடையும் விதத்தில் தற்போது Android சேவையில் காணலாம். விரைவில் iPhone சேவையிலும் வெளிவரும். (இன்ஷா அல்லாஹ்)

திருக்குர்ஆனுக்கு அடுத்த ஆதாரபூர்வமான நபிமொழித் திரட்டுகளில் ஸஹீஹுல் புகாரீ முதல் தரமானது; உலகப் புகழ்பெற்றது. அதற்கு அடுத்த தொகுப்பு ஸஹீஹ் முஸ்லிம்.

இத்திரட்டுகளின் தமிழாக்கம், விளக்கக் குறிப்புகள் இப்போது உங்கள் கையில் மின்னூல்களாக!

இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த தொகுப்புகளும் விரைவில்...
 

https://play.google.com/store/apps/details?id=com.softcraft.hadees
 

--

Download As PDF

சனி, ஜூலை 14, 2012

இறைவனுக்கு மகனா? ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளா?

இறைவனுக்கு மகனா? ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளா?

DSCF4377.JPG


DSCF4381.JPG


DSCF4384.JPG


DSCF4385.JPG


DSCF4386.JPG


DSCF4433.JPG


DSCF4434.JPG


DSCF4436.JPG


DSCF4438.JPG


DSCF4439.JPG


DSCF4468.JPG


DSCF4470.JPG---------- Forwarded message ----------
From: MOHAMMED ISMAIL <sumaiyaexports@gmail.com>
Date: Sat, Jul 14, 2012 at 11:32 AM
Subject: kumbakonam Flex Photos
To: rifariyas <rifariyas@gmail.com>, rifariyas <rifariyas@yahoo.com>

---------- Forwarded message ----------
From: Shafeequr Rahman <aadhilshafeeq@gmail.com>
Date: Sat, 14 Jul 2012 08:41:15 +0530


Download As PDF

புதன், ஜூலை 04, 2012

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!


---------- Forwarded message ----------
From: Shahul Hameed <shahulksa@yahoo.co.in>
Date: 2012/7/1

--- On Sat, 30/6/12, haja <hajabahurudeen@gmail.com> wrote:

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?


பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.


மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும் பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள் ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.

வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும், மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த கவலை.

ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.

மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை  எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.

கவலைகளுக்கும்,நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.


சிண்ட்ரோம் எக்ஸ்


வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.

நீரழிவு(சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.

வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.
வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக குடிக்கொள்கிறது.

சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.


வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்


மனச்சோர்வு(depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்

நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.
ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள் இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை உருவாகிறது.

மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை, மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர். உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.


மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.

வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர் மனச்சோர்வால்(depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய சிகிட்சையை பெற முயலுவதில்லை.

மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும், ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு தற்கொலையில் சென்று முடிவடைகிறது.

வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:

1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.

சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம் தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.


உணவு பழக்க வழக்கம்

சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.

இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில் பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி, தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம் தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும் உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில் கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.

வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர் மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.

சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும் உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல் கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை நோயும் உருவாக காரணமாகிறது.


உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது

10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும், ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும் ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம் பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில் தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.


உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.


ஓய்வில்லாத பணி!

பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.

முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.


ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!

பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.


கடுமையான வெப்பம்

வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.

கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.

பெனடால் என்ற உற்றத்தோழன்


வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.

வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.


பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.


தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.


இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.

உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.


இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!
 
Download As PDF

திங்கள், மே 21, 2012

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

2:178

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى ۖ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَىٰ بِالْأُنْثَىٰ ۚ فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌِ

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

2:179

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَِ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.


சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

சவூதித்  தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த  அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன்  தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

நள்ளிரவில் காருக்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல அந்த சவூதிநபர் முயன்ற போது, அதைத் தடுத்துக்கேட்ட அன்வர்தீனை அஜீஸ் என்னும் பெயருடைய  அந்நபர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

சம்பவமறிந்ததும், அஜீஸ் உடைய தந்தை தன் மகன் செய்த குற்றத்தை உணர்ந்து மகனேயானாலும் காவல்துறையில் ஒப்படைத்துப் பாராட்டு பெற்றார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி கொலைக்குக் கொலை என்கிற வகையில் தண்டனை அமையும்.

இந்நிலையில், கொலையாளியான அஜீஸுடைய குடும்பத்தவர், பரிதாபமாகப் பலியான அன்வர்தீன் குடும்பத்தவரை அணுகி, இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சவூதி சட்டப்படி பாதிக்கப்பட்டோர் மன்னித்தாலே தவிர, தண்டனை உறுதி என்பதால் இவ்வாறு கொலையாளி அஜீஸின் குடும்பத்தவர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால்,  கொலையாளியை மன்னிக்க அன்வர்தீன் குடும்பம் மறுத்துவிட்டது. தமிழக  வார இதழ் ஒன்று தெரிவித்துள்ள தகவல் படி  சவூதி காவல்துறை 'கொலையாளியை மன்னிக்கிறீர்களா?" என்று  கொலையான அன்வர்தீனின் குடும்பத்தவரை வினவியபோது , ""இல்லை... பணம் வேண்டாம். கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்''  என்று கூறியதாகத் தெரிய வருகிறது.

சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிப்புக்குள்ளானோர் மன்னிக்காதபோது,வேறு யாரும் மன்னிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ வழியில்லை என்பது குறிக்கத்தக்கது.


Read more about சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு at www.inneram.com


--

Download As PDF

புதன், ஏப்ரல் 04, 2012

إفشاء السلام

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلاَ أَدُلُّكُم عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُم، أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ)

(ثَلاَثٌ مَنْ جَمَعَهُنَّ فَقَدْ جَمَعَ الْإِيمَانَ: الْإِنْصَافُ مِنْ نَفْسِكَ، وَبَذْلُ السَّلاَمِ لِلْعَالَمِ، وَالْإِنْفَاقُ مِنَ الإِقْتَارِ)

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أيُّ الْإِسْلاَمِ خَيْرٌ قَالَ: (تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ)

Download As PDF

சனி, பிப்ரவரி 04, 2012

மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம்மாஷா அல்லாஹ்! இப்பொழுது Android ஆண்ட்ராய்ட் போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
எமது சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகள் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன. தொடக்கமாக தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் இதோ உங்களுக்காக நாங்கள் வெளியிட்டுள்ளோம். உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் Apple Storeலும் கிடைக்கும்.
 · Share

    • Rifa Riyas இந்தச் சேவையை வழங்கிய உங்களுக்கு இறைவன் (எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - நல்லவர்களான அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.- 95:6) முடிவில்லாத கூலியை வழங்குவானாக ஆமீன்! இப்படிக்கு, அனைத்து பாகங்களையும் மிக ஆவலோடு ஆண்ட்ராய்ட் போனில் எதிர்பார்க்கும் சமூகச் சேவகன் ஜாஹிர் ஹுஸைன் M.A.,
      2 seconds ago · 
--


--

Download As PDF