இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

திங்கள், மே 21, 2012

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

2:178

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى ۖ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنْثَىٰ بِالْأُنْثَىٰ ۚ فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌِ

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

2:179

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَِ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.


சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

சவூதித்  தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த  அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன்  தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

நள்ளிரவில் காருக்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல அந்த சவூதிநபர் முயன்ற போது, அதைத் தடுத்துக்கேட்ட அன்வர்தீனை அஜீஸ் என்னும் பெயருடைய  அந்நபர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

சம்பவமறிந்ததும், அஜீஸ் உடைய தந்தை தன் மகன் செய்த குற்றத்தை உணர்ந்து மகனேயானாலும் காவல்துறையில் ஒப்படைத்துப் பாராட்டு பெற்றார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி கொலைக்குக் கொலை என்கிற வகையில் தண்டனை அமையும்.

இந்நிலையில், கொலையாளியான அஜீஸுடைய குடும்பத்தவர், பரிதாபமாகப் பலியான அன்வர்தீன் குடும்பத்தவரை அணுகி, இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சவூதி சட்டப்படி பாதிக்கப்பட்டோர் மன்னித்தாலே தவிர, தண்டனை உறுதி என்பதால் இவ்வாறு கொலையாளி அஜீஸின் குடும்பத்தவர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால்,  கொலையாளியை மன்னிக்க அன்வர்தீன் குடும்பம் மறுத்துவிட்டது. தமிழக  வார இதழ் ஒன்று தெரிவித்துள்ள தகவல் படி  சவூதி காவல்துறை 'கொலையாளியை மன்னிக்கிறீர்களா?" என்று  கொலையான அன்வர்தீனின் குடும்பத்தவரை வினவியபோது , ""இல்லை... பணம் வேண்டாம். கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்''  என்று கூறியதாகத் தெரிய வருகிறது.

சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிப்புக்குள்ளானோர் மன்னிக்காதபோது,வேறு யாரும் மன்னிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ வழியில்லை என்பது குறிக்கத்தக்கது.


Read more about சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு at www.inneram.com


--

Download As PDF