நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தனது குடும்பத்தின் பொறுப்பாளன். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தனது கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிராக ஈவ்டீசிங் வக்கிரம் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் சகமாணவர்களே என்பது சோகமான விஷயம். இதற்கு வளரும் சூழ்நிலை பெற்றோரின் வளர்ப்பே காரணம் என்கிறார் மதுரை மனநல டாக்டர் வி. ராமானுஜம். ஆந்திராவில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு கல்லூரி மாணவியர் மீது ஆசிட் வீசப்பட்டது. தன்னை ஒருதலையாய் காதலித்த இளைஞரின் காதலை மாணவி ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவி மீதும் தோழி மீதும் ஆசிட் வீசினார். இவ்வழக்கில் கைதான மூன்று இளைஞர்கள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஈவ்டீசிங் கொடுமைக்கு கல்லூரி மாணவி சரிகாஷா பலியானார். பள்ளி கல்லூரி படிக்கும் வயதில் இளசுகளின் மனதில் நஞ்சு விதைப்பது யார். வளர்ப்பில் குறையாஇ வாழும் சூழலில் குறையா என சிந்திக்க வேண்டிய தருணம் இது.கடந்தாண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 312. இதில் தமிழகத்தின் பங்கு 30 சதவீதம் என்ற தேசிய குற்றப் புலனாய்வு துறையின் அறிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரி மனநலப் பிரிவு டாக்டர் வி. ராமானுஜம் கூறியதாவது : குழந்தை பருவத்தில் இருந்தே வளர்ப்பில் குறைபாடு உள்ள குழந்தைகள் பின்பு வக்கிரபுத்திக்கு ஆட்படுகின்றன. கணவன் மனைவி இடையே எப்போதும் தகராறு சந்தேகம் போன்ற சூழலில் வளரும் குழந்தைகளுக்கு சரியான மனப்பக்குவம் இருக்காது. வன்முறை கோபம் போன்றவற்றை கண்டு வளரும் அவர்கள் சிறுவிஷயங்களுக்கும் உக்கிரமாகி விடுகின்றனர். அவர்கள் பாதைமாற முதல் காரணம் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி.
குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிடுவதாக பெற்றோர் கருதுகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு வடிகாலாக இருப்பதில்லை. சிறு வயதில் வீட்டில் ஏற்படும் தவறான எண்ணங்கள் பழக்க வழக்கங்களே எதிர்காலத்தில் வெளியே அவர்கள் வரும் போது சமூகத்திடம் பிரதிபலிக்கின்றன. தாங்கள் செய்வது தவறு என்று அவர்கள் உணர்வதில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. ஒரு வகையில் இதுவும் மனநலப் பாதிப்புதான். மனநல சிகிச்சை மூலம் இவர்களை மாற்ற முயற்சிக்கலாம். எல்லோரிடமும் பழகிஇ எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நம்மை பழக்கப்படுத்திக் கொள்வதுதான் நல்ல வளர்ச்சியடைந்த மனிதனுக்குரிய அடையாளம். இவ்வாறு கூறினார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நற்பண்புகளைப் பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டேன்.'' (முவத்தா மாலிக்)
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களது பிள்ளைகள் ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்'' (ஸுனன் அபூதா¥து)
பொறுப்பான ஒழுக்கமான பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின் அதிமுக்கிய கடமையாகும்.
ஒருவர் இந்த நபிமொழியைச் செவியேற்ற பின்னரும் தமது குழந்தைகள் ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால்பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்க வில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ் வின் கட்டளைகளை மீறிய, குறைபாடுகளுடைய தீயவைகள் நிறைந்த இல்லமாக மாறிவிடும். ஏனென்றால் தொழுகை மட்டுமே அனைத்து விதமான தீய மானக்கேடான காரியங்களை தடுக்கிறது.
நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அன்கபூத் 29:45).
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் குழந்தைகள் வளர்க்கப்படவில்லையென்றால் பெற்றோர் இருவரும் இவ்வுலகில் மட்டுமல்ல நாளை மறுமையிலும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.
''ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை'' (திர்மிதீ 4977 பைஹகீ) இந்த ஹதீஸ் கூறப்பட்டுள்ள கல்வி என்பது நல்லொழுக்கம் இணைந்திட்ட கல்வியாகும்.
அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''ஆயிரம் வணக்கசாலிகளை விட ஒரு கற்றறிந்த மார்க்க அறிஞருக்கு எதிராகத்தான் ஷைத்தான் அச்சமடைகின்றான்'' (திர்மிதீ 217 மற்றும் இப்னு மாஜா).
பெற்றோரும் குழந்தைகளும் எதையும் மனதில் மறைக்காது பரஸ்பரம் உறவாடவேண்டும். தீய வழியில் செல்லாமல் இருக்க இந்த உரையாடல்கள் பெரிதும் துணைபுரியும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர் 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிறகு உன் தந்தை' என்றார்கள். (புகாரீ 5971)
நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுத்து நாளை நமக்கு பிரார்த்தனை செய்யக்கூடிய குழந்தைகளை வளர்;ப்பது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும்.
عن أبي هُرَيْرَةَ رَضيَ اللَّه عَنْهُ أنَّ رسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « إذا مَاتَ الإنسَانُ انقطَعَ عمَلُهُ إلاَّ مِنْ ثَلاثٍ : صَدقَةٍ جاريَةٍ ، أوْ عِلم يُنْتَفَعُ بِهِ ، أَوْ وَلَدٍ صَالحٍ يَدعُو له » رواه مسلم .
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.
1. நிலையான நல்லறம்
2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி
3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை (முஸ்லிம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக