
வியாழன், டிசம்பர் 01, 2011
வெள்ளி, நவம்பர் 25, 2011
தாய்ப்பாலில் கொட்டிக்கிடக்கும் அதிசயங்கள்!
சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.
ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.
குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.
ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.
குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.
மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

கணவன்-மனைவி உறவு பூத்துக்குலுங்க - ஓர் உளவியல் பார்வை!

மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
- கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
- குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
- குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
- வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
- 1. வருமானம்
- 2. ஒத்துழைப்பு
- 3. மனித நேயம்
- 4. பொழுதுபோக்கு
- 5. ரசனை
- 6. ஆரோக்கியம்
- 7. மனப்பக்குவம்
- 8. சேமிப்பு
- 9. கூட்டு முயற்சி
- 10.குழந்தைகள்
- 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
- 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
- 3. கோபப்படக்கூடாது.
- 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
- 5. பலர் முன் திட்டக்கூடாது.
- 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
- 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
- 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
- 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
- 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
- 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
- 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
- 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
- 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
- 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
- 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
- 17. ஒளிவு மறைவு கூடாது.
- 18. மனைவியை நம்ப வேண்டும்.
- 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
- 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
- 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
- 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
- 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
- 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
- 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
- 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
- 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
- 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
- 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
- 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
- 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
- 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
- 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
- 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
- 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
- 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
- 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
- 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
- 3. எப்போதும் சிரித்த முகம்.
- 4. நேரம் பாராது உபசரித்தல்.
- 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
- 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
- 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
- 8. அதிகாரம் பணணக் கூடாது.
- 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
- 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
- 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
- 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
- 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
- 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
- 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
- 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
- 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
- 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
- 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
- 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
- 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
- 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
- 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
- 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
- 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
- 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
- 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
- 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
- 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
- 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
- 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
- 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
- 4. விரும்பியதைப் பெற இயலாமை.
- 5. ஒருவரையொருவர் நம்பாமை.
- 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
- 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
- 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
- 9. விருந்தினர் குறைவு.
- 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
- 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
- 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
- 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
- 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது 2. பிறர் மீது அக்கறை காட்டுவது. 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது. 4. குறை கூறாமல் இருப்பது. 5.சொன்னதைச் செய்து கொடுப்பது. 6. இன்முகத்துடன் இருப்பது. 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது. 8. பிறரை நம்புவது. 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது. 10. பணிவு 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது. 12. பிறர் வேலைகளில் உதவுவது. 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது. 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. 15. சுறுசுறுப்பு 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது. 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது. 18. நகைச்சுவையாகப் பேசுவது. 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது. 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது. 21. நேரம் தவறாமை. 22. தற்பெருமை பேசாமல் இருப்பது. 23. தெளிவாகப் பேசுவது. 24. நேர்மையாய் இருப்பது. 25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
பத்து கட்டளைகள்:
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள். 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள். 3.இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள். 6.எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள். 7.ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள். 8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள் 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
திங்கள், மே 30, 2011
Fwd: "சுவர்க்க நகைகள்" குடும்ப பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்பு
(இஸ்லாமியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்)
GOLDEN CITY, PERIYAKULAM - 625601 THENI Dt.
cell : 95664 63856 Email : kamaaliya@gmail.com
திருமணத்தை எதிர்நோக்கி வீட்டில் இருக்கும் இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கான மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும் இணைந்த பயனுள்ள படிப்பு.
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள், உலமாக்களின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்ற படிப்பு.
அல்லாஹ் நாடிய ஒருவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 5000/-
இன்றே உங்கள் பிள்ளைகளையும் இப்படிப்பில் இணையுங்கள்
12 வயதுக்கு மேற்பட்டு தமிழ் எழுத, வாசிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. வீட்டிலிருந்தே படித்து, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம். வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை.
இரண்டு வருடப்படிப்பு,
படிப்புக்கட்டணம் ரூ. 100/- மட்டும்.
பாடத்திட்டம்:
இந்த படிப்பு இருபாலருக்கும் பொதுவானது. பெண்களுக்காக சில சிறப்பு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இஸ்லாம்: குரான், ஹதீஸ், ஷரீஅத், சட்டம் பற்றிய பாடங்கள், குடும்பம், தொழிலில் எற்படும் நெருக்கடி, குழப்பம் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண குரான், ஹதீஸ் கூறும் பரிகாரமுறைகள்:
மகளிர் மருத்துவம் : வயதுக்கு வந்ததிலிருந்து திருமணமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய பருவ கால இடர்பாடுகள் - பரிகார முறைகள், உடல் ஊனம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், பிறப்பை தடுப்பதற்க்கான வழி முறைகள், கர்ப்ப கால - பிரசவ கால பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய மருத்துவ நிபுணர்களின் அரிய ஆலோசனைகள்.
குடும்ப இயல்: குடும்ப நிர்வாக இயல், மாமியார், நாத்தனாரிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆலோசனைகள், பிள்ளைகளை அறிவாளிகளாக வளர்க்க கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள், பிள்ளைகளை உயர்கல்வி, தொழிற் கல்வி படிக்க வைக்க, கல்வி நிறுவனங்களின், படிப்பு, அங்குள்ள படிப்பில் சேரும் முறை,
தகுதிகள் பற்றிய விரிவான விபரங்கள், அழகுக்கலை, சமையல்கலை மற்றும் ஏராளமான பொது அறிவுப் பாடங்கள்.
சுவர்க்க நகைகள் பற்றிய மேல் விபரங்கள்
இந்தப் படிப்பு ஸுன்னத்வல்ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத் அனைவருக்கும் பொதுவான படிப்பாகும். கொள்கை வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் சம்பந்தமான எந்த விசயங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்றையச் சூழ்நிலையில் குடும்பத்தினருக்கு தீனை நினைவு படுத்திக் கொண்டிருப்பது அவர்களது ஈருலக் பாதுகாப்புக்கு் நல்லது.
வெளிநாட்டில் பணிபுரிவோர் தங்கள் குடும்பத்தினருக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
படிப்புக் கட்டணத்தை ஊரிலிருந்து M.O.மூலம் ஜாமிஆவுக்கு அனுப்பி வைக்கலாம்.
- ஜாமிஆ மில்லியா கமாலியா
செவ்வாய், அக்டோபர் 05, 2010
செவ்வாய், ஜூலை 07, 2009
அழகிய கடன் வழங்குபவர் யார்?
(அவ்வாறாயின்) அவருக்கு அவன் அதைப் பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் (02:245)
இந்த வசனத்தின் மூலம் தனது பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் தன் அடியார்களைத் தூண்டுகின்றான். இதைக் குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறியுள்ளான்
அல்லாஹ்மனிதர்களைப் பார்த்து ஏழையுமில்லாத அநியாயக்காரனாகவும் இல்லாத இறைவனுக்குக் கடன் வழங்குபவர் யார்? என்று கேட்கிறான்.(ஹதீஸ் குத்ஸி)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது இந்த வசனம் அருளப்பெற்றபோது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ ;வின் தூதரே எங்களிடமிருந்து அல்லாஹ் கடனை எதிர்பார்க்கிறானா? என்று கேட்டார்கள் நபி(ஸல்)அவர்கள் ஆம் அபுத் தஹ்தாவே என்று கூறினார்கள் உடனே அவர் அல்லாஹ ;வின் தூதரே உங்கள் கரத்தை என்னிடம் காட்டுங்கள் என்று கூறினார் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தை அவரிடம் நீட்டியதும் அபுத் தஹ்தாஹ் அவர்கள் எனக்குச் சொந்தமான தோட்டத்தை அல்லாஹ்வுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று (நபி(ஸல்) அவர்களின் கரத்தில் தனது கரத்தை வைத்து) கூறினார்கள்.
அந்தத் தோட்டத்தில் அறுநூறு பேரீச்ச மரங்கள் இருந்தன. மேலும் அவருடைய துணைவியார் உம்முத் தஹ்தாஹ் (ரலி) அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் அங்குதான் இருந்தார்கள்.
பின்னர் தம் துணைவியார் உம்முத் தஹ்தாஹ்(ரலி) அவர்களிடம் வந்து உம்முத் தஹ்தாவே என்று அழைக்க அவர் உங்கள் அழைப்புக்கு அடிபணிகிறேன் என்று பதிலளித்தார். அப்போது அபுத் தஹ்தாஹ்(ரலி) அவர்கள் நீ (இங்கிருந்து) வெளியேறிவிடு இந்த இடத்தை என் இறைவனுக்குக் கடனாக வழங்கிவிட்டேன் என்று கூறினார்கள் (நூல்: இப்னு அபீஹாத்திம், இப்னு மர்தவைஹி)
அழகிய கடன் என்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைக் குறிக்கும் என உமர்(ரலி) அவர்களும் முந்தைய அறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர் சிலர் குடும்பத்திற்காக செலவு செய்தல் என்றும் வேறுசிலர் இறைவனைத் துதிப்பது என்றும் இதற்குப் பொருள் கூறியுள்ளனர்.
அவருக்கு அல்லாஹ் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் என்று இவ்வசனம் கூறுகிறது மற்றொரு வசனத்தில் அல்லாஹ ; கூறுகின்றான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோரின் (செல்வங்களின்) நிலையானது ஒரு தானியத்தின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அந்தத் தானியம் ஏழு கதிர்களை முளைக்கச் செய்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. அல்லாஹ் தான் நாடியோருக்கு இன்னும் பன்மடங்குகளாகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாரளமானவனும் அறிந்தவனுமாவான் (02:261)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த வசனம்(02:261) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்தாருக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குபவர் யார்? (அவ்வாறாயின்) அல்லாஹ் அவருக்கு அதைப் பன் மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான் எனும் இந்த வசனம் (245) அருளப் பெற்றது பின்னர் நபி(ஸல்) அவர்கள் இறைவா என் சமுதாயத்திற்கு மேலும் அதிகமாகக் கொடுப்பாயாக என்று மீண்டும் பிரார்த்தித்தார்கள் அதன் பின்னர் பொறுமையாளர்கள் கணக்கின்றி நிறைவாகப் பிரதிப்பலன் அளிக்கப்படுவர்(39:10) எனும் வசனம் அருளப் பெற்றது அல்லாஹ்வைப் பொறுத்தவரை அதிகம் என்பதற்கு அளவே இல்லை.
அல்லாஹ் (தனது செல்வத்தைச் சிலருக்குக்) குறைவாகவும் (மற்றச் சிலருக்குத்) தாரளமாகவும் கொடுக்கிறான் அதாவது செல்வம் குறைந்துவிடும் என்பதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் ஏனெனில் அல்லாஹ்தான் வாழ்வாதாரம் அளிக்கிறான் தன் அடியார்ளில் தான் நாடியோருக்குக் குறைவாகக் கொடுக்கிறான். யாருக்குக் குறைவாகக் கொடுக்க வேண்டும் யாருக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்ற நுட்பம் அவனுக்கே உரியது. மறுமை நாளில் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (தப்ஸீர் இப்னு கஸீர்)
சனி, ஏப்ரல் 18, 2009
இன்னொரு வாய்ப்பு!
| இன்னொரு வாய்ப்பு! | | |
| அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா?
போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை. அதே விழிப்பு, அதே பல்விளக்கல், அதே குளியல், அதே ஓட்டம்.. ஓட்டம்....ஓட்டம்! *** மானிட்டர் திரையில் படித்த முகம் தெரியாத ஒருவனது கனவின் பாதிப்பு என்னையும் தாக்கியது. அடுக்களையில் மும்முரமாயிருந்த மனைவியின் பக்கம் சென்றேன். "மூட் அவுட்டாயிட்ட மாதிரி இருக்கு?" முகம் பார்த்த மனைவி கேட்டாள். "எனக்குக் கொஞ்சம் டீ குடிக்கனும் போலருக்கு. வேலையை முடிச்சிட்டு டீ எடுத்துட்டு வாயேன். காரணம் சொல்றேன்". திரும்பிச் சென்று மீண்டும் படிக்கத் தொடங்கினேன். "இப்ப சொல்லுங்களேன் ..." சற்று நேரத்தில் சூடான, சுவையான தேனீரோடு வந்த மனைவி கேட்டாள். "இதப் படிச்சுப் பாரு" இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு இடமளித்தேன். அடிக்கடி இதுபோல் எனது இரசனைகளை மனைவியைப் படிக்கச் சொல்லிப் பகிர்ந்து கொள்வது வழக்கமாகையால் மலர்ச்சியோடு படிக்கத் தொடங்கிய மனைவியின் முகம் சட்-சட்டெனை மாறிக் கொண்டே வருவதைக் கவனித்தேன். "இந்தக் கனவு நல்லதா கெட்டதான்னு தெரியல. ஏன்னா "நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தம் இடப் பக்கத்தில் துப்பட்டும்.. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது" அப்டின்னு (புகாரீ 7005) ஹதீஸ் இருக்குதுல்ல ...?" என்று கேட்டாள் மனைவி. "கனவு நல்லதா, கெட்டதான்னு நமக்கு எப்டித் தெரியும். ஆனா, கனவு கண்டவருக்கு நல்ல மனமாற்றத்த ஏற்படுத்தி இருக்குன்னு வெளங்குதில்லையா?" என்று எதிர்க் கேள்வி போட்டேன். "சும்மானா நெட்டுலயும் ஈமெயில்லயும் நல்லதுன்னு நெனச்சு எழுதறவங்க நிறைய இருக்கிறாங்கன்னு தெரியும். அவரு அப்டி ஒரு கனவக் கண்டு, திருந்தி வாழ்ந்தா சந்தோஷம்தான். ஆனா கனவே காணாமல் எழுதியிருந்தா பிரச்சினை. ''ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வரானால் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால் அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது!'' என்றும் (புகாரி 7042) ஹதீஸ் இருக்கு! "எல்லாத்துக்கும் ஹதீஸச் சொல்லி மடக்குறியே" "என்ன செய்ய ...? குர்ஆனுக்கு அடுத்தபடியா அதுதானே நம்ம வாழ்க்கைக்கு அடிப்படை" என்று ஒரேடியாப் போட்டாள் மனைவி. வாயடைத்துப் போனேன். |
--
with more kinds,
M. Zakir Hussain
My Blog: http://read-quran.blogspot.com
புதன், பிப்ரவரி 25, 2009
இசைக்கு இடம் இல்லை இஸ்லாத்தில்
حدثنا عبد الرحمن بن غنم الأشعري قال: حدثني أبو عامر - أو أبو مالك - الأشعري، والله ما كَذَبَني:
سمع النبي صلى الله عليه وسلم يقول: (ليكوننَّ من أمتي أقوام، يستحلُّون الْحِرَ والحرير، والخمر والمعازف، ولينزلنَّ أقوام إلى جنب عَلَم، يروح عليهم بسارحة لهم، يأتيهم - يعني الفقير - لحاجة فيقولوا: ارجع إلينا غداً، فيُبيِّتهم الله، ويضع العلم، ويمسخ آخرين قردة وخنازير إلى يوم القيامة).
நூல்;புஹாரி,எண் 5590
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)
முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் என்று பதில் கூறினார்.
Ahmed’s Musnad vol.1. pp.289 and 350 : vol.2. pp.158.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
முஸ்னத் அஹ்மத் பாகம்:2 பக்கம் 165 மற்றும் 167
நிச்சயமாக அல்லாஹ் மதுவையும், சூதாடுவதையும், தானியங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவைகளையும், மத்தளம் அல்லது மேளத்தை யும் (நரம்பினால் ஓசை எழுப்பக் கூடிய) கிதார் போன்றவற்றையும் எனது உம்மத்துக்கு தடை செய்துள்ளான். மேலும், (ஒற்றைப்படைத் தொழுகையான) வித்ரு - என் மீது அதிகப்படியாகக் கடமையாக்கி உள்ளான்.
Entitled Al-Mustadrak ‘alas saheehayn ; the hadeeth appears on p.40 of vol.4.
நிச்சயமாக நான் அழுவதைத் தடைசெய்யவில்லை. மாறாக,இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும்.
முதலாவது, ஷைஷத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும் இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன்.
எனது, இந்த அழுகையானது, மனதில் ஏற்பட்ட துக்கத்தினால் இரக்கம், கருணை காரணமாக வெளிப்பட்டதாகும். ஏவர் மனதில் கருணை இரக்கம் இல்லையோ அவர் இதனை அடைந்து கொள்ள மாட்டார்.
மேலே அல் ஹாக்கிம் - ல் வ்நத ஹதீஸை உறுதிப்படுத்துமுகமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் புல்லாங்குழல் போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
சினிமாப்பாடல்களில் அர்த்தமுள்ளப் பாடல்களும் உண்டு, சினிமாவைத் தவிர்த்த கிராமிய கூத்து, கிராமியப்பாடல்கள், இஸ்லாமிய?ப் பாடல்கள் போன்றவற்றில் மோசமானவையும் உண்டு. அர்த்தத்திற்காக பாடல்கள் ரசிக்கப்பட்டால் பாடல்களின் அர்த்தத்தைப் பொருத்துதான் கூடும் கூடாது என்று சொல்ல முடியும். இசைக்காக பாடல் ரசிக்கப்படுகின்ற நிலை வந்தால் அது வெறும் கேலி பொழுது போக்கு, நேரத்தை வீணடித்தல் போன்ற காரியங்களில் நம்மை இழுத்துச் செல்லும் என்பதால் தவிர்த்து விட வேண்டும்.
நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.
அவர்கள் ”(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ”எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.
”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 4307
குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
















































Indian Rupee Converter