இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஆஷுரா நோன்பின் சிறப்புகள்

Ashoura عاشوراء on Tuesday 06-12-2011 in Saudi Arabia


JEDDAH – Sheikh Abdul Aziz Bin Abdullah Aal Al-Sheikh, Grand Mufti of the Kingdom, 
has said the day of fasting for Ashoura, Muharram 10, falls on Tuesday, Dec. 6. Sheikh Aal Al-Sheikh called this a way out of arguments that the crescent was not sighted to mark the beginning of Muharram. 
He said Saturday therefore was the last day of Dhul Hijjah and Sunday the first of Muharram. Hence, the 9th and 10th of Muharram – days on which Muslims are recommended to fast – fall on Monday (Dec. 5) and Tuesday (Dec. 6) respectively




நடப்பு ஆண்டு 2011 / 1433 ஆஷூரா நோன்பு 06-12-2011 செவ்வாய்கிழமை அன்று கடைபிடிக்கப்படும் என சவுதி முப்தி அறிவித்திருக்கிறார்.

مفتي السعودية يدعو لصيام عاشوراء الاثنين والثلاثاء
المسلم/صحيفة عكاظ  | 6/1/1433 هـ

 
مفتي السعودية
 في رد على الجدل الدائر بشأن تحديد يوم عاشوراء, دعا فضيلة مفتي عام المملكة العربية السعودية رئيس هيئة كبار العلماء وإدارة البحوث العلمية والإفتاء الشيخ عبدالعزيز بن عبدالله آل الشيخ إلى صيام عاشوراء يومي الاثنين والثلاثاء.


وقال فضيلته أن هذا مخرج من القول بأن رؤية هلال شهر محرم لم تثبت فيكون السبت تمام ذي الحجة والأحد غرة محرم والإثنين تاسوعاء والثلاثاء عاشوراء.

من جهته، قال نائب رئيس مجلس إدارة الجمعية الفقهية السعودية أستاذ الفقه في جامعة الإمام محمد بن سعود الإسلامية الدكتور سعد بن تركي الخثلان، إن دخول شهر محرم ليلة السبت الماضي لم يثبت.

وأضاف: «لقد قال رسول الله صلى الله عليه وسلم (فإن غم عليكم فأكملوا العدة ثلاثين) وعليه فإن يوم الأحد هو غرة شهر محرم (أي بعد تقويم أم القرى بيوم)، وبذلك يكون يوم عاشوراء الثلاثاء 11 من محرم حسب تقويم أم القرى والذي يوافقه 6 من ديسمبر الجاري، لافتا إلى أن السنة أن يصام يوم قبله أو يوم بعده.

أما عضو هيئة التدريس في جامعة أم القرى الدكتور إحسان المعتاز فقال أنه «نظراً لأن يوم الجمعة الماضي كان هو 29 من شهر ذي الحجة يقيناً بحكم المحكمة العليا، فإن يوم السبت من هذا الأسبوع وافق اليوم الأول من شهر الله المحرم حسب تقويم أم القرى».

 وتابع  «أعتقد أنه لم يتم رؤية هلال المحرم ليلة السبت مع وجود محاولات لرصده، خصوصاً مع وجود غيم في بعض مناطق التحري».

وزاد «ولذا فإن الأمر لا يخرج عن احتمالين اثنين؛ أولاهما: أن يكون يوم السبت هو الأول من المحرم فعلا فيكون يوم عاشوراء هو يوم الاثنين المقبل مع استحباب صوم يوم قبله أو بعده. وثانيهما: أن يكون يوم السبت هو 30 من ذي الحجة، ويكون يوم الأحد هو الأول من المحرم، وبذلك يكون الثلاثاء المقبل موافقاً ليوم عاشوراء».

ويسن صيام يوم عاشوراء، لما له من فضل عظيم ثبت بأكثر من حديث نبوي، فقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان يصوم يوم عاشوراء ويرغب الناس في صيامه؛ لأنه يوم نجى الله فيه موسى وقومه، وأهلك فيه فرعون وقومه، فيستحب لكل مسلم ومسلمة صيام هذا اليوم شكراً لله عز وجل.

وأشار العلماء إلى أنه يستحب للمسلم أن يصوم قبل عاشوراء يوماً أو بعده يوماً مخالفة لليهود في ذلك, وإن صام الثلاثة جميعاً التاسع والعاشر والحادي عشر فلا بأس؛ لأنه روي عن النبي صل الله عليه وسلم أنه قال:"خالفوا اليهود صوموا يوماً قبله ويوماً بعده"، وفي رواية أخرى:"صوموا يوماً قبله أو يوماً بعده".

وصح عنه صلى الله عليه وسلم أنه سئل عن صوم عاشوراء فقال: "يكفر الله به السنة التي قبله".



ஆஷுரா நோன்பின் சிறப்புகள்


1.ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும்நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமழான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)


2.இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாளுடைய நோன்பின் சிறப்பை நபி (ஸல்) அவர்கள் தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பையும் தேடியதாக நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

3.ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

4.ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

5.நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூராதினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.

6.நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விழையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம் றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமை படுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விழையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.

7. (பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உன்றிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)

8.ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


9.அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


10.ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

--

Download As PDF

1 கருத்து:

  1. அறிய சேவை மேலும் இது தேவை பணிகள் தொய்வின்றி தொரட்டும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்/

    பதிலளிநீக்கு