இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

வியாழன், டிசம்பர் 08, 2011

இறைவனின் அருட்கொடைகள்



பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

இறைவன் நம் மீது அருளப்பட்ட அருட்கொடைகள். நாம் வாழும் உலகில் அல்லாஹ் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்கியுள்ளான். நம்மை பற்றி சற்று சிந்திப்போம்.

நாம் காலையில் எழுந்தது முதல் நமக்கு பல பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும் பல வகையான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். சுருக்கமாக சொல்வதானால் நம் மீது அருளப்பட்ட பல அருட்கொடைகளின் காரணமாக நாம் உயிர் வாழ்கிறோம்.

நாம் எழுந்தவுடன் சுவாசிக்கிறோம். இதை செய்வதற்கு நமக்கு எந்த கஷ்டமும் ஏற்படுவதில்லை. காரணம் நமது சுவாசத் தொகுதி முறையாக தொழிற்படுகிறது.

நாம் கண்ணை திறந்தவுடன் நம்மால் பார்க்க முடிகிறது. தெளிவாகவும் - தூரமாகவுமுள்ள காட்சிகள்- மூன்று கோணங்களிலும் - வர்ணங்களும் நமது கண்ணுக்கு தெளிவாக தெரிகிறன. இதற்கு நமது கண் மிக நுண்ணியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.

நாம் சுவையான உணவுகளை உண்ணுகிறோம். நாம் உண்ணும் உணவிலுள்ள வைட்டமின்கள் மினரல்கள் காபோஹைடரேட்கள் அல்லது புரத சத்துகள் எமது உடலில் சேமிக்கப்படுகிறதை பற்றியோ அல்லது உடல் அதை எவ்வாறு உபயோகிக்கிறது என்பதை பற்றியோ நாம் கவலைபடுவதில்லை.

இவ்வாறு ஒரு தொழிற்பாடு எமது உடலில் நடைபெறுகிறது.

நாம் ஒரு பொருளை கையில் எடுத்தவுடன் அது கடினமானதா அல்லது மிருதுவானதா என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். இதை செய்ய நாம் எமது மூளையை செலவிடுவதில்லை.

இதை போன்ற எண்ணிலடங்காத சில நொடி செயல்கள் நமது உடலில் நடைபெறுகிறன. இந்த தொழிற்பாட்டிற்கு பொறுப்பான உறுப்புகள் சிக்கலான முறையில் தொழிற்படுகின்றன.

மனித உடல் பல சிக்கலான இயந்திரங்களின் தொகுப்பு எனலாம். இந்த உலகில் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பெரும் அருள்களில் இந்த உடலும் ஒன்றாகும்.

وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّـهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّـهَ لَغَفُورٌ رَّحِيمٌ 
இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை உங்களால் எண்ண முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும்,
மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (16: 18)

وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّـهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்.
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது!
நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும்,
 மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். (14: 34)

இப்பொழுது உங்களை சுற்றியுள்ளவற்றை பார்த்து சிந்தியுங்கள். இவை அனைத்தும் அல்லாஹ் மனிதன் மீது இறக்கிய அருட்கொடைகளாகும்.
Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக